Vanakkam 

Tamilsangam.no   Est.2005.

A site for all Tamils in Norway                           

 "தம் எனும் மூச்சில் ஈழ் எனும் குரலை பேசுபவன் தமிழன்"

Bruk Tamilsangam.no som Startside!                       Contact; admin@tamilsangam.no

  Cover art  இந்த உலகில் பிறந்தஒவ்வோர் உயிரியும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறது. மாந்தர்களில்பலரும், பல்வேறுபுறச்சூழல்களில் சிக்கித்தவித்து, அகத்தை நெறிப்படுத்த இயலாது, கலங்கி, உழன்று, இறுதிவரை துன்பச்சேற்றிலேயே மூழ்கிமூழ்கி, மாண்டுபோகின்றனர். மகிழ்வாகவாழ அகமும், புறமும் நெறிப்படுத்தப்படவேண்டும். இதுதான் பண்டைய தமிழர்கண்ட வாழ்முறை. அந்த வாழ்முறைக்கான பண்புக்கூறுகளை வரிசைப்படுத்துவதே திருக்குறளின்நோக்கம்.

 

 

  -Home-  
|
  -About-  

 

 

Nettaviser:

தமிழ்ச்செய்திகள்:

English News:  

 

  

  

 

 


  
 

  
ஐரோப்பாவில் முதல் முறையாக, நோர்வே நாட்டின் பேர்கன் நகரில் செம்மொழித்திருநாள் 03.06.2017 சிறப்பாக நடந்து முடிந்தது.

பேர்கன் நகரைச்சேர்ந்த திருமதி. தோவ சிறிபாலசுந்தரம் முதன்மை விருந்தினராக வருகைதந்து மங்கலவிளக்கேற்றி நிகழ்ச்சியைத்தொடக்கிவைத்தார்.

இந்நிகழ்வில் பேர்கன் தமிழ்ச்சங்கத்தின் காலைகலாச்சார பொறுப்பாளர் திரு. பூலோகநாதன் வரவேற்பு உரையாற்றினார்.

இலங்கை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் முனைவர் அ. சண்முகதாஸ் “செம்மொழி என்றால் என்ன?” என்ற தலைப்பிலும், ஜப்பான்நாட்டின்  டோக்கியோவில் அமைந்துள்ள கக்சுயின்  பல்கலைக்கழகத்தின்  முன்னாள் ஆய்வுப்பேராசிரியர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் “செம்மொழித்தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பிலும், புதுச்சேரி அரசின் பட்டமேற்படிப்பு மையத்தின் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் “செம்மொழியின் எதிர்காலம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பேர்கென் பாடசாலைகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் ஒஸ்லோ நகரைச்சார்ந்த எழுத்தாளர் உமாபாலன், பேர்கென் நகரை சேர்ந்த பேராசிரியர் தயாளன் ஆகியோரின் உரையும் , காலை நிகச்சிகளும் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்தநிகச்சியை சிறப்பாக நடாத்தி முடிக்க உதவியோர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி.

இப்படிக்கு, நிகழ்ச்சிப்பொறுப்பாளர்: பாலசிங்கம் / யோகேந்திரன்-முனைவர் கு. அரசேந்திரன், சென்னை கிறித்தவக் கல்லூரி.

தமிழ் மக்கள், தம் சொந்த மண்ணாகிய தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் உள்ள கோவில்களில் தத்தம் வழிபடும் கடவுளைத் தமிழால் வழிபடாமல் பிறமொழியாகிய சமற்கிருதத்திலேயே மிகுதியும் வணங்கி வருகின்றார்கள். இப்பழக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கட்டிய கோவில்களிலும் தொடர்வதாகவே தெரிகின்றது. சிவனியம், மாலியம் ஆகிய தொல்தமிழ்ச் சமயக் கோவில்களில் வழிபாடாற்றும் தமிழர்கள் சமற்கிருதம் ஆகிய அயல்மொழிக்கு அடிமைப்பட்டு கிடக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி, அந்நிலையுருவான வரலாற்றை விளக்கி அதில் நிகழ வேண்டிய உரிமை மீட்புத் தேவையைப் பேசுவதாகவே இக்கட்டுரை அமைகின்றது. மேலும் படிக்க

 

 

 

 

YR.No 

 

OSLO

OsloKommune

AnnaiPoopathy

NorgesHinduKulturesenter

StovnerSportsClub

NorwayTamilFilmFestival

 

BERGEN

Bergenkommune

BergenTamil

BergenTamilskole

BergenTamilSportsClub

MannarBergen

BergenHindusabha

St.PaulMenighet

BIKS

DFIRH

HordalandFylke

Neithal

 

LINKS 

ABCStartsiden

ALTINN

AviNor 

Barneombudet    

ChristianSongs

CricketOnlineTV

DeepamTV

DinSide

EmbassyIndia

EmbassySrilanka

Filmweb

Forskning.no

FotoArkivet

HumanRights

Jobby

KIM

Legevakten

Lommelegen

Monster.no

Morningstar

NAV

Reise

Skatteetaten

SunTV

Telefonkatalogan

UDI:Forsiden

Wikipedia

WriteInTamil

தமிழ்விக்கிபீடியா 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

Bruk Tamilsangam.no som Startside!   Tamilsangam estab:2005