ஐரோப்பாவில் முதல் முறையாக, நோர்வே நாட்டின் பேர்கன் நகரில் செம்மொழித்திருநாள் 03.06.2017 சிறப்பாக நடந்துமுடிந்தது.
பேர்கன் நகரைச்சேர்ந்த திருமதி. தோவ சிறிபாலசுந்தரம் முதன்மை விருந்தினராக வருகை தந்து மங்கல விளக்கேற்றி
நிகழ்ச்சியைத்தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் பேர்கன் தமிழ்ச்சங்கத்தின் கலைகலாச்சார பொறுப்பாளர் திரு. பூலோகநாதன் வரவேற்பு உரையாற்றினார்.
இலங்கை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் முனைவர் அ. சண்முகதாஸ் செம்மொழிஎன்றால் என்ன?
என்ற தலைப்பிலும், ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் அமைந்துள்ள கக்சுயின் பல்கலைக்கழகத்தின் முன்னாள்
ஆய்வுப்பேராசிரியர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் செம்மொழித்தமிழ்இலக்கியம் என்றதலைப்பிலும்,
புதுச் சேரி அரசின் பட்டமேற்படிப்புமையத்தின் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் செம்மொழியின் எதிர்காலம்
என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.
1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பேர்கென் பாடசாலைகளில் தமிழ்கற்பிக்கும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் ஒஸ்லோ நரைச்சார்ந்த எழுத்தாளர் உமாபாலன், பேர்கென் நகரை சேர்ந்த பேராசிரியர் தயாளன் ஆகியோரின்உரையும்,
காலை நிகச்சிகளும் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்த நிகச்சியை சிறப்பாக நடாத்தி முடிக்க
உதவியோர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி.
இப்படிக்கு, நிகழ்ச்சிப்பொறுப்பாளர்:
பாலசிங்கம் / யோகேந்திரன்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வோர் உயிரியும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறது. மாந்தர்களில் பலரும், பல்வேறு
புறச்சூழல்களில் சிக்கித்தவித்து, அகத்தை நெறிப்படுத்த இயலாது, கலங்கி, உழன்று, இறுதிவரை துன்பச்சேற்றிலேயே மூழ்கி மூழ்கி, மாண்டுபோகின்றனர்.
மகிழ்வாகவாழ அகமும், புறமும் நெறிப்படுத்தப்பட வேண்டும். இதுதான் பண்டைய தமிழர்கண்ட வாழ்முறை, அந்த வாழ்முறைக்கான பண்புக்கூறுகளை வரிசைப்படுத்துவதே திருக்குறளின் நோக்கம்.
கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்...
"உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று...

மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.
...
"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.

திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல்,
ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.

"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக,
ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும்,
அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக,
கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!

உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும்.
ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.

தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.


இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால்,
ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர்,
கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.

கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால்,
ஒருவன் கெட்டவன் என்றில்லை.
கோவிலுக்குச் செல்பவன் என்பதால்,
ஒருவன் நல்லவனும் இல்லை.

கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி,
கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.தமிழ் மக்கள், தம் சொந்த மண்ணாகிய தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் உள்ள கோவில்களில் தத்தம் வழிபடும் கடவுளைத் தமிழால் வழிபடாமல் பிறமொழியாகிய சமற்கிருதத்திலேயே மிகுதியும் வணங்கி வருகின்றார்கள். இப்பழக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கட்டிய கோவில்களிலும் தொடர்வதாகவே தெரிகின்றது. சிவனியம், மாலியம் ஆகிய தொல்தமிழ்ச் சமயக் கோவில்களில் வழிபாடாற்றும் தமிழர்கள் சமற்கிருதம் ஆகிய அயல்மொழிக்கு அடிமைப்பட்டு கிடக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி, அந்நிலையுருவான வரலாற்றை விளக்கி அதில் நிகழ வேண்டிய உரிமை மீட்புத் தேவையைப் பேசுவதாகவே இக்கட்டுரை அமைகின்றது. >தமிழால் இறைவனை வழிபடுவோம்

admin@tamilsangam.no

"தம் எனும் மூச்சில் ஈழ் எனும் குரலை பேசுபவன் தமிழன்"